சென்னை ஜன, 18
அர்ஜென்டினாவை சேர்ந்த புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலைய்டா குவேரா முதல்முறையாக சென்னைக்கு வருகை தந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னையில் மூன்று நாட்கள் தங்க உள்ள அலெய்டா குவேரா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.