செங்கல்பட்டு ஜன, 13
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமையான வருகிற 20 ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முக தேர்வை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.