Spread the love

தர்மபுரி ஜன, 12

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

பின்னர் இக்கூட்டத்தில் பொதும க்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 364 மனுக்கள் வரப்பெற்றன.

இதனைத் தொடர்ந்து, பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பொருட்டு பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தின் சார்பில் 83 பழங்குடியன இளைஞர்களுக்கு தலா ரூ.12000- வீதம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஓட்டுநர் பயிற்ச்சியுடன் கூடிய ஓட்டுநர் உரிமத்தினையும், வருவாய் துறையின் சார்பில் காரிமங்கலம் வட்டம் பூமாண்டஅள்ளியில் 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *