திருவாரூர் ஜன, 10
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உணவுக் காளான் வளர்ப்பு பயிற்சி நடந்தது. உணவுக் காளானின் நன்மைகளை பற்றியும், அதனை உற்பத்தி செய்யும் முறைகளை பற்றியும், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் விவசாயிகள் மட்டுமல்லாமல் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகளும் கலந்துக் கொண்டனர். உணவுக் காளான் உற்பத்தி பற்றி அறிந்து கொண்ட பிறகு மாணவிகளும், விவசாயிகளும் செய்முறை பயிற்சியில் ஈடுபட்டனர்.
இப்பயிற்சியின் ஒரு பகுதியாக கண்காட்சி நடைபெற்றது. அதில் காளான் வளர்ப்பு குடில், காளான் உருளை, படுக்கை காளான், வித்துக்கள் மற்றும் நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கான பொருட்களும் இடம் பெற்றிருந்தன. இந்த பயிற்சியில் கலந்துக்கொண்ட விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பயிற்சியை நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.