சத்தீஸ்கர் ஜன, 9
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் பாதித்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் சி ஆர் பி எஃப் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சுக்மா மாவட்ட தலைமையகத்தில் 12 ஜோடிகளுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் முன்னிலையில் பெரிய அளவில் திருமணம் நடந்தது. இதில் மணமக்களுக்கு அன்பளிப்புகள், ரூ,1100 மற்றும் 12 ஜோடி புடவைகளை பரிசாக அளித்தனர் தம்பதியினரை சிஆர்பிஎப் தளபதி டிஎன் யாதவ் வாழ்த்தினார்.