சென்னை ஜன, 8
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று இபிஎஸ் ஆதரவாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறுவது முற்றிலும் தவறு இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். இதனால் வரும் தேர்தலில் இபிஎஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைந்து தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.