சென்னை ஜன, 9
ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வலியுறுத்தி வரும் 13ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். தேசிய கீதம் இசைப்பதற்க்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி தேசிய கீத அவமதிப்பாகும். அவர் இனியும் அப்பகுதியில் நீடிக்க தகுதியில்லை என்று கூறியுள்ளார்.