சேலம் ஜன, 8
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நார்த்தஞ்சேடு கிராமம். இந்த கிராம மக்கள் சாலை வசதி வேண்டி பலமுறை போராட்டங்கள் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் சாலை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு, இன்று சாலை அமைக்கும் பணியை தொடங்கி னர். இந்த நிலையில், நார்த்தஞ்சேடு கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள சுமார் 18 கிராம மக்களும், தற்போது போடப்படும் சாலை எங்களுக்கு வேண்டாம் எனவும், நீதிமன்ற ஆணைப்படி 6-வது வழித் தடத்தில் சாலை அமைத்து தர கோரியும், திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஏற்காட்டில் இருந்து கொட்டச்சேடு வழியாக சேலம் செல்லும் சாலையில் மறியல் போராட்டம் நடத்தியதால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து ஏற்காடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.