மயிலாடுதுறை ஜன, 7
மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்கவேண்டும் என முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 31-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
இதனையடுத்து மீண்டும் சிறப்பு முகாம்கள் அமைத்து ஆதார் எண் இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சீர்காழி வாணிவிலாஸ் துவக்கப்பள்ளியில் மின்சாரவாரியம் சார்பில் மின் நுகர்வோர்கள் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி சிறப்பு முகாம் தொடங்கி நடந்தது. இந்த பணியை மின்வாரிய செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மின்வாரிய துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயசித்ரா, உதவி கணக்கு அலுவலர் (பொ) செந்தாமரை, உதவி பொறியாளர் முத்துக்குமார், மின்வாரிய பணியாளர் ஆனத்தக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.