திண்டுக்கல் ஜன, 5
திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் டேனியல்சாலமன் வழிகாட்டுதலின்படி அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு விபத்தில்லாமல் பாதுகாப்பாக பேருந்துகளை இயக்குவது குறித்த அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல், பழனி, தேனி, குமுளி, போடி உள்ளிட்ட வழித்தடங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து டிரைவர்கள் கவனமுடன் பேருந்துகளை இயக்க வேண்டும். மிதவேகம், மிகநன்று, வேகத்தை குறைப்போம், விபத்தை தடுப்போம், வளைவுகளில் முந்தாதீர் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.