நெல்லை ஜன, 4
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அனவன்குடியிருப்பு பகுதியில் அனவன்குடியிருப்பு, அகஸ்தியர்புரம், அருணாச்சலரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அருணாச்சலபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுக நயினார், பொன்னுசாமி உள்ளிட்ட சில விவசாயிகள் பயிர் செய்திருந்த சுமார் 3 ஏக்கர் பரப்பிலான வாழைகள் மட்டை காய்ச்சல் கருகல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளன.
அதாவது குலை தள்ளும் நிலையில் உள்ள இந்த வாழை மரங்களில் தண்டு பகுதி அழுகும் நிலையில் காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இப்பகுதியில் சுமார் 3 ஆயிரம் வாழை குலை தள்ளும் நிலையில் இருக்கும் போது மட்டை காய்ச்சல் கருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. வாழைக்கு சுமார் ரூ.50 முதல் ரூ.80 வரை செலவு செய்துள்ளோம். இதற்கே கூட்டுறவு வங்கிளில் கடன் வாங்கிதான் விவசாயம் செய்தோம். ஆயிரம் வாழையில் சுமார் 50 வாழைகள் காட்டுப்பன்றி, மிளா, யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் சேதமடைந்துள்ளது. அதையும் மீறி இவ்வாறு நோயால் வாழைகள் சேதமடைந்துள்ளது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த நோய் பரவலை தடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
A.ஜான்பீட்டர்
செய்தியாளர்
நெல்லை.