அரியலூர் ஜன, 3
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பதிவு செய்தவர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள், தங்கள் ஆதாரை புதுப்பிக்காதவர்கள் அனைவரும் இணைய தளத்திலோ அல்லது தங்களுக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையங்களில் (வட்டாசியர், நகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்) அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை நேரில் தாக்கல் செய்து புதுப்பித்து கொள்ளலாம்.
மேலும், ஆதார் அட்டையை புதுப்பிக்க முதல் கட்டமாக சிறப்பு முகாம்கள் 5ம் தேதி வரை செந்துறை வட்டாட்சியர் அலுவலகம், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உடையார்பாளையம் வட்டாசியர் அலுவலகம் மற்றும் தத்தனூர் வறுமை ஒழிப்பு சங்க அலுவலகங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் மேற்கண்ட முகாம்களை பயன்படுத்தி ஆதார் அட்டையை புதுப்பித்து கொள்ளலாம் என செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.