சென்னை ஜன, 3
வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74.36 கோடி மதிப்பில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 20223 ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் ஏற்கனவே அமைச்சர் கே.என் நேரு அறிவித்திருந்தார். அதன்படி சின்ன நொளம்பூர் பகுதியில் ரூ.42.71 கோடி திட்ட மதிப்பீட்டிலும், சன்னதி முதலாவது குறுக்கு தெருவில் 31.65 கோடி திட்ட மதிப்பீட்டிலும் இந்த பாலங்கள் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.