தேனி ஜன, 2
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டும் தேனி ஒன்றியத்துக்குக்கு உட்பட்டும் உள்ள அரண்மனைப்புதூர் பகுதியில் சிலம்பம் பாண்டி சிலம்ப பயிற்சி மையம் பள்ளி அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்தமானில் சர்வதேச அளவில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இந்த சிலம்ப போட்டிகளில் 42 நாடுகளிலிருந்து 700 சிலம்ப மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் மாஸ்டர் பாண்டியன் மாஸ்டர் கண்ணன் மாஸ்டர் கவிதா ஆகியோரின் தலைமையில் 15 வீரர்கள் இந்த சர்வதேச சிலம்பப் பயிற்சி போட்டியில் கலந்து கொள்வதற்காக அந்தமான் சென்றனர்.
பாண்டி சிலம்ப பயிற்சி பள்ளியிலிருந்து 15வீரர்கள் பங்கேற்ற இந்த சிலம்ப போட்டியில் சிலம்பம் பாண்டி பயிற்சி பள்ளி மாணவர்கள் 13 தங்கப் பதக்கங்களையும் இரண்டு வெள்ளி பதக்கங்கங்களையும் வென்று சாதனை படைத்தனர். இந்நிலையில் சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கங்களையும், வெள்ளி பதக்கங்களையும் வென்று சாதனை படைத்த வீரர்களை தேனி அருகே உள்ள அரண்மனை புதூர் கிராமத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பானது தேனி அரண்மனை புதூர் விலக்கிலிருந்து ஊர்வலமாக முல்லைப் பெரியாறு ஆற்றின் வழியாக வருகை புரிந்து அரண்மனை புதூர் கிராமம் வரை வழி நெடுக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிலம்பம் மாஸ்டர்கள் சிலம்பம் மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமான பங்கேற்றனர்.