தர்மபுரி ஆகஸ்ட், 11
தர்மபுரி கொள்முதல் மையத்தில், பட்டுக்கூடுகளை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுவதால், வரத்தும், விலையும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிகரித்து வருகிறது. சுற்றுப்பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது.
மேலும் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 1922 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.632-க்கும், குறைந்தபட்சமாக ரூ.251-க்கும், விற்பனையானது. மொத்தம் ரூ.8 லட்சத்து 22 ஆயிரத்து 175 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.