Spread the love

நெல்லை ஜன, 2

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அய்யப்பன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கார்த்திகை மாதம் நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது.

இதையொட்டி அய்யப்ப சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அய்யப்ப பக்தர்களின் சிறப்பு பஜனை இடம்பெற்றது. அய்யப்ப பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். அதன் பின் கோவில் முன்பு பிரமாண்ட பூக்குழி தயார் செய்யப்பட்டது. விஷேச அலங்கார தீபாராதனைகளுக்கு பின்னர் திரளான அய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *