திண்டுக்கல் ஜன, 1
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய பகுதியில் ரூ.15 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் நிறைவு மற்றும் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளரும், திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான பொன்ராஜ், ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, பழனி தாசில்தார் சசி, ஊராட்சி தலைவர்கள் சுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.