Spread the love

திருவாரூர் டிச, 31

திருவாரூர் அருகே அகரதிருநல்லூர், இலவங்கார்குடி, விளமல், தியானபுரம் ஆகிய பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அனைத்து நியாய விலைக்கடையில் எடை எந்திரம் சரியாக இயங்குதிறதா என்பதையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் இருப்பு விவரம் குறித்த பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அதில் தண்டலை ஊராட்சி, விளமல் பகுதியில் இயங்கி வரும் நியாய விலைக்கடையில் புழுங்கல் அரிசி 1050 கிலோ கூடுதலாக இருப்பு இருப்பதனை கண்டறியப்பட்டு ரூ.26 ஆயிரத்து 250 அபாரதம் விதித்தார். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, தாசில்தார் நக்கீரன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *