திருப்பூர் டிச, 31
மத்திய மாநில அரசுகள் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தபடுத்தி வருகின்றன . திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு வாகன பிரச்சார ஊர்தி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டங்கள் குறித்து ஒலிபெருக்கியின் மூலமும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.