வேலூர் டிச, 31
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 31 ம் தேதி இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடவும் அமைதியாக கொண்டாடும் பொருட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் நிலையங்கள் ரயில் நிலையங்கள் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் கூடுதலாக ஆண் மற்றும் பெண் காவலர்கள் சீருடைகளும் சாதாரண உடைகளிலும் நியமிக்கப்படுவார்கள்.
இப்பணிக்காக வேலூர் மாவட்டத்தில் 1200 காவல் துறையினர் பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து ஒளி பெருக்கிகள் வைக்க கூடாது. மேலும் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட யாருக்கும் அனுமதி கிடையாது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.