விழுப்புரம் டிச, 30
விழுப்புரம் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 1020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சித்ரா விஜயன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரா இயக்க திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயசந்திரன், விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ஷீலா சேரன் உள்பட பலா் கலந்து கொண்டனர்