சேலம் டிச, 27
சீனாவில் புதிய வகை (பி.எப்.-7) கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அந்த நாட்டில் தினமும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சேலத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் கோவை விமான நிலையத்தில் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர். அதாவது, அங்கு தெர்மல் ஸ்கேனிங் செய்வதோடு, அறிகுறி இருந்தாலும், இல்லாவிட்டாலும் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. குறிப்பாக சீனா, வடகொரியா, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் ஆகிய 5 நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.