ஈரோடு டிச, 26
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிக அளவில் இருந்தது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் மாநகராட்சி ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக தற்போது மாவட்டத்தில் கொேரானா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இது குறித்து சுகாதாரத் துறையினர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஈரோடு மாவட்டத்தில் 23 லட்சத்து 77,315 பேர் உள்ளனர். இவர்களில் 1 லட்சத்து, 36,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 1 லட்சத்து 35,922 பேர் குணமடைந்தனர். இன்றைய நிலையில் 2 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 27.76 லட்சம் பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.