சென்னை டிச, 25
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நள்ளிரவு தேவ ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான குடும்பங்களுடன், புத்தாடை உடுத்தி பங்கேற்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்து வந்தது. இந்த ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று கிறிஸ்மஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.