சென்னை டிச, 22
தமிழக அரசு வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தி வருவதாக அமைச்சர் பி.டி.ஆர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சமூக நீதியும், பொருளாதார நீதியும் வெவ்வேறானவை. சமூக நீதி என்பது அனைவரையும் சமமாக பார்ப்பது ஆனால் பொருளாதார நீதி என்பது கண்களை திறந்து பார்க்க வேண்டும். பொருளாதார நீதியை அடைய தரவுகளை தொடர்ந்து மேம்படுத்தி வருவது அவசியம் என்றார்.