புதுடெல்லி. டிச, 22
ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடல் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றது. 83 பாடல்கள் இடம் பெற்ற பட்டியலில் இருந்து 15 பாடல்கள் இறுதி பட்டியலுக்குள் நுழைந்துள்ளன. இதில் பிளாக் பாந்தர் படத்தில் இடம்பெற்ற லிஃப்ட் மீ அப், அவதார் 2 படத்தில் இடம்பெற்ற நத்திங் இஸ் லாஸ்ட் ஆகிய பாடல்களுடன் நாட்டு நாட்டு பாடலும் நுழைந்துள்ளது.