சென்னை டிச, 20
திரிஷா நடித்துள்ள ராங்கி படத்திலிருந்து 30 நிமிட காட்சிகளை தணிக்கை குழு அதிரடியாக நீக்கி உள்ளது. படத்தில் அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எஸ்பிஐ உள்ளிட்ட பெயர்களில் நிறைய சர்ச்சை காட்சிகள் இருந்ததால் இதை நீக்கினால் தான் படம் வெளியிடுவதற்கு அனுமதி தர முடியும் என தணிக்கை குழு கூறியுள்ளது. இதையடுத்து அது நீக்கப்பட்டு படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.