சேலம் டிச, 19
பழைய பேருந்து நிலையத்தில் வ.ஊ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, ஓமலூர், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கன்னங்குறிச்சி, வாழப்பாடி,பேளூர், வீராணம், டி.பெருமாபாளையம் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த சில நாட்களாக முகூர்த்தம், திருவிழாக்கள் இல்லாததால் பூக்களின் விலை சரிபாதியாக சரிந்து விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மார்கழி மாதம் பிறந்துள்ளது. இதையொட்டி கோவில்களில் சாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக பூக்களின் தேவை அதிகரித்து, விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.