கரூர் டிச, 14
கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்துக்கு திருநீறு, குங்குமம் பூசி அவமதித்தவர்களை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மாநில விவசாய அணி செயலாளர் வீர செங்கோலன், நகர செயலாளர் முரளி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.