விழுப்புரம் டிச, 13
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.