விருதுநகர் ஆகஸ்ட், 9
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பட்டாசு ஆலை சிவகாசியை சேர்ந்த சண்முகையா என்பவருக்கு சொந்தமான ரோல் கேப் வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை தாயில்பட்டி அருகே மண்குண்டான்பட்டியில் உள்ளது. இங்கு 15 அறைகள் உள்ளன. இதில் 30 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் ரோல் கேப் வெடி மருந்து தயாரிக்கும் அறையில் பட்டாசு கழிவுகளை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வினால் தீப்பிடித்தது. அறைசேதம் உடனடியாக தொழிலாளர்கள் வெளியேறினர். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் ஊழியர்கள் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அறை முற்றிலும் சேதம் அடைந்தது. தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து தாயில்பட்டி வருவாய் ஆய்வாளர் விக்னேஷ், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை துணைக் காவல் ஆய்வாளர் வெற்றிமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.