ஈரோடு டிச, 12
தமிழர் பண்டிகையான பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்குதான். தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனங்களுடன் பனங்கிழங்கும் வழங்குவது வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சில நேரங்களில் மார்ச் மாதம் வரை பனங்கிழங்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு பனங்கிழங்கு சீசன் தொடங்கி உள்ளது. தற்போது தான் பனங்கி ழங்கு வரத்தொடங்கி உள்ளது. ஈரோடு மாநகரில் பஸ்நிலையம் பகுதி, வ.உ.சி. மார்க்கெட் பகுதி, கடை வீதி, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பனங்கிழங்குகளை ஏராளமான விவசாயிகள் கட்டுகளாக கட்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். 10 கிழங்குகள் உள்ள ஒரு கட்டு ரூ.50 முதல் வரை விற்பனை செய்யப்படுகிறது.