சட்டோகிராம் டிச, 10
இந்தியா-வங்கதேசம் இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி சட்டோகிராமில் இன்று காலை 11:30 மணிக்கு தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்றதால் தொடரை இழந்த இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகாமல் இருக்க இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ரோகித் இல்லாததால் அணியை ராகுல் வழிநடத்த உள்ளார். சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும் இந்த போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெறுமா என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.