தென்காசி டிச, 9
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று காலை தென்காசி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் பெரியசாமி, நேரு ஆகியோர் உடன் வந்தனர்.
அங்கு தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், நெல்லை சரக துணை காவல் ஆய்வாளர் பிரவேஷ்குமார், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், சட்ட மன்ற உறுப்பினர்கள் ராஜா அப்துல் வகாப் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இவ்விழாவில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து அனைத்து துறைகளின் சார்பில் ரூ.34.14 கோடி மதிப்பில் 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அனைத்து துறை சார்பில் ரூ.22.20 கோடி மதிப்பில் 57 முடிவுற்ற பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.