Spread the love

திட்டக்குடி ஆகஸ்ட், 9

கடலூர் திட்டக்குடி அருகே உள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளுடன், குறைகேட்பு கூட்டம் நடக்கும் அரங்குக்கு முன்பு திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, ஆட்சியர் பாலசுப்பிரமணியமிடம், கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தை நாங்கள் நடைபாதையாக பயன்படுத்தி வந்தோம். தற்போது அந்த இடத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக பட்டா பெற்ற நபர்கள், பாதை வழியாக செல்வதை தடுக்கின்றனர். ஆகவே அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து கிராம மக்கள், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *