கரூர் டிச, 6
கரூர் மாவட்ட கைப்பந்து சங்க பொதுக்குழுக் கூட்டம், தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் 2023 ஜனவரியில் பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலும், ஏப்ரல் மாத இறுதியில் மாநில அளவிலும் போட்டிகள் நடத்த வேண்டும். ஆண்டுதோறும் மாவட்ட அளவில் சாம்பியன்ஷிப் போட்டி நடத்த வேண்டும். மாவட்டத்தில் கைப்பந்து விளையாட்டை மேம்படுத்தும் வகையில், குழுக்களை கண்டறிந்து அவர்களுக்கு வலை மற்றம் பந்து வழங்க வேண்டும். ஆண்டுதோறும் கோடைகால பயிற்சி முகாம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.