Spread the love

வாணியம்பாடி ஆகஸ்ட், 8

திருப்பத்தூர் வாணியம்பாடியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள், மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், மத்திய அரசின் மின் சட்டம் 2022-ஐ கண்டித்தும் வேலையை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகைய செயலால் இலவச மின்சாரம் பறிபோகும். விலைவாசி உயரும். எனவே மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *