திருப்பூர் டிச, 4
எம்.எஸ் நகர் மண்டல் 28 வது வார்டு உட்பட்ட பாரதி நகரில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 40க்கு மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
அங்கு குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பயன்படுத்த கழிப்பறை வசதி இல்லை, இதனால் குழந்தைகள் வெளிப்புறத்தை கலிப்பிடமாக பயன்படுத்துவதால் குழந்தைகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது
பகுதி பொது மக்களின் கோரிக்கை:
இதனால் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எஸ் நகர் மண்டல தலைவர் வேலுச்சாமி வழிகாட்டுதலின் படி மண்டல பொதுச்செயலாளர் பழனியப்பன் மற்றும்
மகளிர் அணி மாவட்ட செயலாளர் நிர்மலா நாச்சியார், மண்டல மகளிர் அணியின் தலைவி ராதா மற்றும் வார்டு தலைவர் செல்வம், மண்டல நிர்வாகிகள் அங்கன்வாடி நிலையத்திற்கு தற்போது இருக்கும் நிலைமையை அந்தப் பகுதியில் மாநகராட்சியின் கவுன்சிலர்க்கு விளக்கிக் கூறி மேலும் விரைவில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.