புதுச்சேரி டிச, 2
புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் மற்றும் தலைக்கவசம் அணியாமல் செல்லும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.