அரியலூர் டிச, 1
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படியும், அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படியும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாக்காளர் சிறப்புத்திருத்தம்- 2023 தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள், 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தங்கள் மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.