திருச்சி நவ, 30
திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகாமையில் கொட்டப்பட்டு குளம் அமைந்துள்ளது. சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளத்தின் கரைகள் மிகவும் மோசமாக உள்ளன. மேலும் ஆக்கிரமிப்புகளாலும் மழைக்காலங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து விடுகிறது.
இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அந்த குளத்தினை ரூ.1 கோடி செலவில் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி நீர் நிலையை ரசித்த வண்ணம் குளத்தை சுற்றி நடைபயணம் செல்ல வசதி செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் தெருவிளக்குகள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.