தேனி நவ, 27
தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் எஸ்.ஆர் தமிழனின் நினைவினைப் போற்றும் வகையில் எட்டாம் ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. முதலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொது செயலாளர் எஸ்.ஆர் சக்கரவர்த்தி தலைமையில் எஸ்.ஆர் தமிழனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோவில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உட்பட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினார்கள். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் சேகரிக்கப்பட்டதை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ரத்த சேகரிப்பு மருத்துவ அலுவலர்கள் அனுமாந்தன், பிரியா ரத்த வங்கி செயலாளர் கலையரசன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ பணியாளர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த ரத்த தானமுகாமில் பங்கேற்ற அனைத்து நபர்களுக்கும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள், தன்னார்வர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.