சென்னை நவ, 26
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6 வது நினைவு தினமான டிசம்பர் 5 ல் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்து அமைதிப் பேரணி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிந்தவர் ஒன்று கூட வேண்டும் என்ற ஓபிஎஸ் இன் கருத்தை சசிகலாவும் எதிரொலிக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் பன்னீர் செல்வத்தையும் சந்திப்பேன் என டிடிவி தினகரன் கூறினார். ஜெயலலிதாவின் நினைவு நாள் அமைதிப் பேரணி தான் பிரிந்தவர் சேர்வதற்கான முதல் அடியாக இருக்கப் போகிறது என அரசியல் தரப்பு வட்டாரங்களில் கூறப்படுகிறது.