சென்னை நவ, 26
ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படத்தில் காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் குல்சான் குரோவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.