சென்னை நவ, 26
கடந்த மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு தான் எண்ணுடன் ஆதாரை அபராதம் இன்றி இணைப்பதற்கான காலக்கெடு முடிந்தது. அதன் பிறகு இணைப்பவர்களுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் பான் மற்றும் ஆதாரை இணைக்காவிட்டால் அதன் பிறகு பான் கார்டு முற்றிலுமாக முடக்கப்படும் என்றும் அதனை எங்கும் பயன்படுத்த இயலாது என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.