சென்னை நவ, 26
கிறிஸ்மஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு ஆவின் மூலம் சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகை காலத்தில் பொது மக்களுக்கு ஆவின் நூறு மில்லி நெய் பாட்டில்கள் எவ்வித இடர்பாடின்றி கிடைக்கும் வகையில், அதன் உற்பத்தியை பெருக்கவும் ஐஸ்கிரீம் தயிர் உற்பத்தியை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.