திருவாரூர் நவ, 25
திருத்துறைப்பூண்டியில் நம்பிக்கை தொண்டு நிறுவனம், தமிழ்நாடு இளம் குழந்தைகளின் பராமரிப்பு கூட்டமைப்பு இணைந்து அங்கன்வாடி தின விழா, அங்கன்வாடி சீர்திருவிழா ஐந்து மையங்களில் நடந்தது.
இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட வேளாளர்விஜயா வரவேற்றார். திருத்துறைப்பூ ண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அங்கன்வாடி திட்ட த்தையும் பணிகளையும் நம்பிக்கை கொண்டு நிறுவணம் தொடர்ச்சியாக செய்து வரும் பணிகளையும் பாராட்டி பேசி திருத்துறைப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் கலை நிகழ்ச்சி பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரோட்டரி டெல்டா சங்க தலைவர் ரமேஷ், முன்னாள் தலைவர் காளிதாஸ், திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு லயன் சங்க தலைவர் முகமது இக்பால், செயலாளர் தங்கமணி, அங்கன்வாடி மைய பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.