குஜராத் நவ, 25
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். பொது சட்டத்தை கொண்டுவர நாடாளுமன்றம் உரிய நேரத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என அரசியல் சாசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஜன சங்கமாக இருந்த காலத்திலிருந்து பாஜக பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளது எனவும் ஷா தெரிவித்துள்ளார்.