புதுச்சேரி நவ, 23
புதுவை கலிதீர்த்தாள் குப்பதில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி, பாண்டிச்சேரி என்ஜினீயரிங் கல்லூரி அடல் தொழில் அபிவிருத்தி, ஊக்குவிப்பு மற்றும் ஆதரவு மைய அறக்கட்டளையுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான “தொழில் அதிபர் ஆக விருப்பப்படுங்கள்” எனும் தலைப்பில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பாண்டிச்சேரி என்ஜினீயரிங் கல்லூரி அடல் தொழில் அபிவிருத்தி மைய தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணுவர்தன், கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி என்ஜினீயரிங் கல்லூரி அடல் தொழில் அபிவிருத்தி மையத்தின் ஆதரவுடன் செயல்படும் ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் எக்ஸார் ரோபோயிக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அருணன், கார்க்கி மொபிலிட்டி சர்வீசஸ் நிறுவனர் அப்துல்லா மற்றும் முதலீட்டாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்துரையாடினர்.