மும்பை நவ, 23
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். அதன்படி ட்விட்டரை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். வாட்ஸ் அப்பில் இருக்கும் வீடியோ காலிங், ஆடியோ காலிங், மெசேஜிங் வசதிகளை ட்விட்டரில் கொண்டு வர இருக்கிறார். இதற்கான உதவியை வாட்சப்பில் போட்டி நிறுவனமான சிக்னலின் ஊழியர்களிடமிருந்து பெற உள்ளாராம்.